கிளிநொச்சி ஆனையிறவில் புதிதாய் முளைக்கும் பௌத்த விகாரைகள்

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து மிகப்பெரும் இனப்படுகொலையை நடாத்தி முடித்திருக்கும் சிறீலங்கா அரசாங்கம் தற்போது மக்களை அவர்களின் வாழ்விடங்களிற்குச் செல்லவிடாமல் காலம் கடத்தி வருகின்றது.

temple7இதன் பின்னணியில் பல உள்நோக்கங்கள் இருப்பதாக தெரிய வருகின்றது. அவர்களின் தாயக நிலத்தில் இருக்கும் அடையாளங்களை அழித்து புதிதாக பௌத்த சிங்கள அடையாளங்களை தோற்றுவித்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக கிளிநொச்சி வைத்திய சாலையை அண்டிய பிரதேசத்திலும் ஆனையிறவிலும் மிகப்பெரிய பௌத்த விகாரையை அமைத்துக்கொண்டிருக்கின்றனர் சிங்கள ஆக்கரமிப்பு படையினர். அத்துடன் வன்னி நிலமெங்கும் எங்கெங்கெல்லாம் அரசமரம் இருக்கின்றதோ அதற்குகீழ் ஒவ்வொரு புத்தர் சிலைகளும் முளைத்துவருகின்றன.

தமிழரின் வாழ்வியல் பண்பாட்டு அடையாளங்களை முழுமையாக அழித்து  எண்ணற்ற புத்தர்சிலைகளையும் பௌத்த சிங்கள அடையாளங்களையும் விதைக்கும்படி கோத்தபாய சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிற்கு உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.