சகல பணிகளிலும் இருந்து விலகி கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழப் போகிறாராம் கோத்தபாய

சகல பணிகளிலும் இருந்து விலகி, கிராமத்திற்கு சென்று ஒய்வுடன் சுகமாக வாழப் போவதாக பாதுகாப்பு  அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
தன்னால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  அனைத்தும் முடிவடைந்து விட்டன.

raja-kothaதற்போது பிரச்சினைகள் இல்லை. இராணுவத்தினரின் நலன்புரி நடவடிக்கைகளை முடித்த பின்னர், தான் கிராமத்திற்கு செல்ல போவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். 
 
படையினர், போரில் அங்கவீனமடைந்த படைச்சிப்பாய்களின் குடியிருப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட  பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தப் பின்னர், கிராமத்திற்கு சென்று சாரத்தை கட்டிக் கொண்டு  ஒய்வெடுப்பேன்,  எமக்கு வயல்கள் இருக்கின்றன. அரசியலில் ஈடுபடப் போவதில்லை. என்னை அவற்றில்  சிக்கவைக்க வேண்டாம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.