இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப் படுவதை அலட்சியப்படுத்தும் மத்திய அரசு – தமிழ்நாட்டு மக்கள் இதற்க்கு என்ன செய்யப் போகின்றார்கள்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்டுகிறார்கள். இது குறித்து பல் வேறு போராட்டங்களை நடத்திய பின்பும். மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. இந்நிலையில் தீபாவளியன்று சனிக்கிழமை இலங்கைக் கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களைத் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து சனிக்கிழமை இரவு கடலில் முழ்கடித்தனர்.

question-mark1a copyஇதனால் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில்  ராமேசுவரத்தில் இருந்து அக்டோபர் 17‐ம் தேதி சுமார் 80 விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றன. வழக்கம்போல், படகுகள் இந்திய‐இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது அப் பகுதியில் 7 போர் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீன்பிடி படகுகள் சிலவற்றை சிறை பிடித்தனர்.

பின்னர் படகுகளிலிருந்த மீனவர்களை கம்பு கயிறால் தாக்கினர். பின்னர் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அரிவாளால் வெட்டிச் சேதப்படுத்தி கடலில் மூழ்கடித்தனர். மேலும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கரைக்குத் திரும்பும்படி விரட்டியடித்தனர். இதனால் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.