அமெரிக்காவில் கைதான இராஜரட்ணம் விடுதலைப்புலிகளுக்கு நிதி கொடுத்தாரா?

உலகின் கோடீஸ்வர வர்த்தகர்களில் ஒருவரும், இலங்கையருமான இராஜ் இராஜரட்ணத்திடம், அவர் விடுதலை புலிகளுடன்தொடர்பு வைத்திருந்தாரா என்று அமெரிக்கப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

Raj_Rajaratnamபங்குச்சந்தை வியாபாரத்தை சட்டவிரோதமான முறையில் மேற்கொண்டார் என்று குற்றஞ்சாட்டியே கோடீஸ்வர வர்த்தகர் இராஜரட்ணம் (வயது  52) கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தாரா என்பது குறித்து அமெரிக்கப் பொலிஸார் தற்போது அவரை விசாரித்து வருகின்றனரென “வோல் ஸ்ரீற் ஜேர்னல்” என்கிற அமெரிக்க ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு அவர் பெருந்தொகை நிதியை வழங்கியிருக்கின்றார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனரென்றும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் இராஜரட்ணம் புலிகளுடன் தொடர்புடையவர் அல்லர் என்றும், 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்குத்தான் அவர் நிதியுதவி வழங்கினார் என்றும் இராஜரட்ணத்தின் வழக்கறிஞர் ஜிம்வல்ரன் தெரிவித்துள்ளார் எனவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.