யாழ் மற்றும் வவுனியா முகாம்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்: திருமாவளவன்

இலங்கையில் உள்ள யாழ் மற்றும் வவுனியா முகாம்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

thirumaஇலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் 5 நாள் பயணமாக சென்று திரும்பினர்.
எம்.பி.க்கள் குழுவில் இலங்கை சென்ற திருமாவளவன் இன்று கூறியுள்ளதாவது,

இலங்கையில் முகாமில் உள்ள தமிழர்கள் உறவினர்களை கூட சந்திக்க முடியவில்லை என்றும், யாழ் மற்றும் வவுனியா முகாம்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.