ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயற்சி: வி.சிறுத்தைகள் 50 பேர் கைது

இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயன்றதாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் ராஜூவ் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரிக்க திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Viduthalai_3இதனையடுத்து போலீசார் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலை அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ராஜூவ் தலைமையில் அங்கு வந்தார்கள். இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனே அவர்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும் கோஷமிட்டனர். தடையை மீறி அவர்கள் மறியல் செய்ய முயன்றனர். இதனைத் தொடர்ந்து ராஜூவ் தலைமையில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.