இடம்பெயர்ந்தோர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளன

வடக்கு இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
 
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 273000 பேரில் 100000 பேர் மட்டுமே இந்த ஆண்டுக்குள் மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

hrw-700315எனினும், இதற்கு முன்னர் சுமார் 80 வீதமான மக்களை மீள் குடியேற்ற முடியும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.
 
கடந்த மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இதுவரையில் சுமார் 27000 பொதுமக்களே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் காண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கி வரும் பொய்யான வாக்குறுதிகளை நட்பு நாடுகள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
முகாம்களில் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமாக இடம்நகரும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
சொந்த வீடுகளுக்கு திரும்ப முடியாதவர்கள் தங்களது உறவினர்களுடன் வாழ்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஆரம்பத்தில் 80 வீதமான மக்களை மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும் இந்த ஆண்டில் இறுதியில் 37 வீதமான மக்களையேனும் மீள் குடியேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.