பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வுகளும் சபை நடவடிக்கைகளும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வுகளும், சபை நடவடிக்கைகளும் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு செலவீனத்திற்காக குறைநிறைப்பு பிரேரனை மீதான விவாதம் மற்றும் பசில் ராஜபக்ஷவின் இராஜினாமா உரை போன்ற பல எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

srilanka02எனினும், நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளி துமளிகள் காரணமாக சபை நடவடிக்கை  இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
சபாநாயகர் W.J.M. லொக்கு பண்டார இன்று சபையில் விசேட உரை ஒன்றினை ஆற்ற இருந்தார்.
 
இதையடுத்து, அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைத் துணியினால் போர்த்திக்கொண்டு சபைக்குள் நுழைந்து  சபை நடுவில் நின்றுள்ளார். இதையடுத்து, ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கை சபாநாயகர்  W.J.M லொக்கு பண்டாரவினால் ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதற்கு முன்னரும் சுமார் 10 நிமிடம் வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கேபண்டார பதாகை ஒன்றினை ஏந்தி சபையில் எழுந்து நின்றதை அடுத்தே சபை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. 
 
இதனையடுத்து ஆளும் தரப்பிலிருந்து வெள்ளைத்துணிகள் எதிர் தரப்பை நோக்கி வீசப்பட்டதாகவும், இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடங்கள் ஒத்தி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.