நாடு கடந்த தமிழீழம் அமைக்க உதவும் நாடுகளுக்கு இலங்கை கடும் கண்டனம்

கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, நோர்வே, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக 59 ஈழவாதிகளுக்கு இடமளித்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் இந்த நாடுகளிடம் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ourlandநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவதற்காக அமெரிக்காவில் உள்ள விடுதலைப்புலிகளின் பிரதிநியான சட்டத்தரணி உருத்திரகுமாரினால், கனடாவில் 29 பேரும், பிரித்தானியாவில் 15 பேரும், அமெரிக்காவில் 13 பேரும், நோர்வே மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் தலா இருவரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் பெயர் விபரங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக திவயின கூறியுள்ளது. இது சம்பந்தமாக மேற்கூறிய நாடுகளின் தூதுவர்களை அழைத்து கருத்தறிய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியிருந்த போதிலும் விடுதலைப்புலிகள் குறித்த பிரதிநிதிகளின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.