குருநாகலில் புலி உறுப்பினர் ஒருவர் கைது – காவல்துறை

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடரூந்தில், விடுதலைப்புலிகளின் இலச்சினை உள்ளிட்ட ஆவணங்களுடன் பயணித்த, விடுதலைப்புலிச் சந்தேக நபர் ஒருவர்  குருணாகல தொடரூந்து நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

handcuff1982 ஆம் ஆண்டு இவர் காணாமல் போனதாக அவரது தந்தையினால், வவுனியா காவற்துறையில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டு பிரதியென்றும் இந்த ஆவணங்களுடன் இருந்தாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இந்த தொடரூந்து, முத்தெட்டிகல‐ குருணாகல் இடையில் திடீர் சோதனைக்கு உட்படுத்திய போது, பெண்ணொருவருடன் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் பெண்ணின் உறவு முறை மகன் எனவும் அவருக்கு தொழில் வாய்பொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், குறித்த பெண், அவரை கொழும்புக்கு அழைத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட இவர்களிடம் குருணாகல் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.