அறிக்கை வெளியிட்டதற்க்காக திருமாவளவன் மீது வழக்கு தொடரப் போவதாக சு.சாமி அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பொறுப்பற்றதாகும். இலங்கைக்கு எம்பிக்கள் குழுவோடு சென்றபோது அங்கு பேசி இருக்க வேண்டிய கருத்துக்களை இங்கே அறிக்கையாக அவர் வெளியிட்டுள்ளார்.

questionskvoor090500048ஒரு எம்பி இன்னொரு நாட்டுடனான உறவை கெடுக்கும் வகையில் கருத்து வெளியிடுவது குற்றமாகும். எனவே அவர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருமாவளவனுடன் சேர்ந்து முதல்வரும் சதி செய்வதாக இவர்கள் இருவர் மீதும் நான் வழக்கு தொடருவேன். விடுதலைச் சிறுத்தை கள் கட்சியை  கூட்டணியிலிருந்தும் திமுக வெளியேற்ற வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 27 அரசியல் கட்சி தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்தன. இது பற்றிய பட் டியலை கேட்டு இலங்கை அரசுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.

திருமாளவனின் அறிக்கையை வாசிப்பதற்கு இங்கு அழுத்தவும்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.