தமிழ் மக்களையும் எங்களது அபிவிருத்தி பணிகளில் இணைத்து கொள்ளுங்கள் – மலேசிய பிரதமர்

தமிழ் மக்களை நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டுமென மலேசிய பிரதமர் டெடுக் சிறி டுன் ரஸாக் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

najibநாட்டின் அபிவிருத்திப் பணிகளில் தமிழ் மக்களை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இவ்வாறு தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலம் படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரும் இல்ஙகைத் தமிழர்களின் எண்ணக்கையை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்ட விரோதமாக பிரவேசிப்பதற்காக இலங்கையர்கள் 15000 முதல் 20000 வரையிலான அமெரிக்க டொலர்களை செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்தும் வர்த்தகத்தையும் இதன் மூலம் தடுத்து நிறுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.