ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கையின் இடம் 162

உலக ஊடக சுதந்திர தர வரிசையின் பட்டியல்படுத்தல்களுக்கு அமைய இலங்கை 162ம் நிலையை வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஆசிய நாடுகளில் ஊடக சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என பாரிஸை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

reporters-without-borders-logo-source-rfsorgவடகொரியா, பர்மா போன்ற நாடுகளில் அதிகளாவான ஊடக அடக்குமுறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஊடக தணிக்கை, கைது செய்தல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சில நாடுகளில் இராணுவத்தினால் ஊடக அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும் சில நாடுகளில் அரசாங்கங்களினால் ஊடக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் அரசாங்கங்களினால் ஊடகங்களின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையில் ஊடகவியலாளர் ஒருவருக்கு இருபதாண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பல ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
 
யுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஊடகவியலாளர்கள் பல்வேறு அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.