இராணுவக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வெடிக்கலாம் என்ற அச்சம்தான் காரணமா

இலங்கையில், யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் பாரிய இராணுவ கட்டமைப்பு எதற்கு என சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் தரப்பிலிருந்து மீண்டுமொரு இராணு கிளர்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தினாலேயா? இராணுவ கட்டமைப்பு தொடர்ந்தும் பலபடுத்தப்பட்டு வருகிறது என்றும் கேள்வி எழுப்பியது.

Srikaanthaஅத்துடன் இந்த நாட்டில யுத்தம் முடிவந்துள்ளதாகவும், இங்கு நடைபெற்றது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தம் அன்றி உள்நாட்டு யுத்தமே எனவும் யுத்தத்தினால் உயிரிழந்த சகலரும் எமது நாட்டு மக்கள் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் குறைநிறைப்பு பிரேரனை மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா இதனைத் தெரிவித்தார்.
 
ஆயையால் யுத்தம் நிறைவடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், இராணுவத்திற்கு செலவு செய்யும் பணத்தை தேசிய அபிவிருத்திக்கு செலவு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் தேசியத்தை முன்னேற்றலாம் எனவும் அலோசனை வழங்கினார்.
 
படையினர் சுயமாக படைப்பிரிவிலிருந்து விலகிச்செல்லும் வகையில் அவர்களக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தெரிவித்த அவர், இதற்கு எதிர்கட்சிகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், முன்னாள் இராணுவ தளபதியும் தற்போதைய முப்டைகளின் பிரதானியுமான சரத் பொன்சேக்கா பொதுக்கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை தமது கட்சி முழுமையாய எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
 
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்காவா? வேறு யாருமா? என்ற அறிவிக்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர கூறியதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேக்க பொதுவேட்பாளராக களமிறங்குவதை தாம் எதிர்ப்பதாகவும் கூறினார்.
 
இராணுவ அதிகாரி ஒருவர் அரசியலில் ஈடுபடுவது நல்லதல்ல எனவும், அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் ஈடுபட்;டால் அது தவறில்லை எனவும் குறிப்பிட்ட அவர் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.