உங்கள் பணம் எமக்கெதற்கு; இந்தியா உள்ளது எம்மை காக்க

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்தால், இந்தியா  மத்திய அரசு இலங்கைக்கு குறித்த கடன் தொகையை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் குறித்த கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Amunugamaஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கு உதவிகளை வழங்கத் தயார் என இந்திய பிரதமர் மன் மோகன் சிங், சர்வதேச நாணய நிதியத்திற்கு நேரடியாகத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் ஆதரவளிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியப் பிரதிநிதிக்கு அந்நாட்டு நிதியமைச்சர் தொலைபேசி மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.