இலங்கை நிலவரம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது

இலங்கை நிலவரம் குறித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவு அறிவித்துள்ளது.
 
இலங்கையின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நாளைய தினம் விவாதமொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

european20union20flagsமனித உரிமை மீறல், சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகிய விடயங்கள் குறித்து இந்த விவாதத்தின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் உயரதிகாரி பிலிப் கமாரிஸ் தெரிவித்துள்ளார்.
 
ஈராக் மற்றும் கயானா ஆகிய நாடுகளினது மனிதாபிமான சூழ்நிலை குறித்தும் நாளைய தினம் விவாதம் நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத ஓர் நிலை காணப்படுவதாக ஐரோப்பிய பாராளுமன்ற குழுவின் தெற்காசிய விவகாரப் பொறுப்பாளர் ஜேன் லெம்பார்ட் தெரிவித்துள்ளார்.
 
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
நாளைய தினம் நடைபெறவுள்ள விவாதம் மற்றும் தீர்மானம் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை இலங்கைக்க நீட்டிப்பது தொடர்பில் மிக முக்கிய ஏதுவாக அமையப் பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்த ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் முயற்சி மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.