ஒரே மேடையில் வெடித்த பிள்ளையான் – முரளிதரன் மோதல்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியாவில் பாலம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட பிள்ளையானுக்கும் அமைச்சர் முரளிதரனுக்கும் இடையில் கடும் கருத்துமொதல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவித்தன.

இதன் எதிரொலியாக மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள முரளிதரனின் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

laughing-guy-thumb168075இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் கிண்ணியாவில் பாலம் திறப்புவிழா இடம்பெற்று பின்னர் பொதுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் முரளிதரன் பிள்ளையானை தாக்கி கடுமையாக உரையாற்றியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிள்ளையான் முரளிதரனை தாக்கி கடுமையாக உரையாற்றியுள்ளார்.இதன்போது முரளிதரனுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் குறித்த மேடையில் மகிந்தவுக்கு முன்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது இலங்கையின் அரச தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இரு குழவினருக்கும் இடையில் இருந்துவந்த முரண்பாடு ஒரே மேடையில் பெரிதாக வெடித்துள்ள நிலையில் மட்டக்களப்பு,ஆரையம்பதியில் உள்ள அமைச்சர் முரளிதரனின் அலுவலகம் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையிலான மோதல் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.