தமிழர்களின் தனி நாட்டுக் குடியரசுக்கு கன்சர்வேட்டிவ் உதவும் – ரொபேர்ட் ஹால்

கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸெக்ஸில் நடந்த நிகழ்வு ஒன்றில் பிரிட்டிஷ் அரசியலின் அதிகரித்த தலையீடு மற்றும் அரசியல் கட்சிகளின் பரஸ்பர திறந்த பேச்சு என்பவற்றின் மூலம் கடமையுணர்வுள்ள பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமிழ் வாக்காளர்களை அடைந்து இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக தமது நிலைப்பாட்டைப் பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் இலங்கைப் பிரச்சனையில் தமது நிலைப்பாடு குறித்தும் இலங்கையில் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளனர்.

consஅண்மையில் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் தமிழ் கன்சர்வேட்டிவ் அசோசியேசனால் தொடர்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் முதலாவது நிகழ்வு இதுவாகும். இந்நிகழ்வின் சில பகுதிகள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியாயத்தை எடுத்துக் கூறியதோடு, வாக்குவன்மைக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆரம்பித்தல் என்பன குறித்து வலியுறுத்துவதில் கவனம் எடுத்துள்ளனர்.

இதேவேளை, தமிழர்களுக்கு தனி குடியரசு வேண்டும் என்பதையும் அதை பெறுவதற்கு அவர்களுக்கான தகுதியில் ஒரு குறைவுமே இல்லை எனவும் கடந்த சனிக்கிழமை கன்சர்வேட்டிவ் வேட்பாளரான ரொபேர்ட் ஹால்·பன் தனது வலைத் தளத்தில் எழுதியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.