ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம் தொடர்பான அறிக்கைக்கு விளக்கமளிக்க இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு விளக்கமளிப்பதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்டி, அண்மையில் ஐரோப்பிய ஆணைக்குழுவினால் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கமளிக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

RohithaBogollagamaஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்ட நீடிப்பு தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் 27 நிபந்தனைகள் தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழு கடந்த 19ம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
 
மனித உரிமை, நல்லாட்சி மற்றும் ஜனநாயகம் போன்ற துறைகள் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஐரோப்பிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து விசாரணைகளை நடாத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.