ராஜ் ராஜரட்னத்திற்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம்?

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட அமெரிக்க கோடிஸ்வரரான ராஜ் ராஜரட்னத்திற்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

rajrajaratnamபங்குச் சந்தையில் அவர் மேற்கொண்டுள்ள மோசடி காரணமாக அவருக்கு 110 மில்லியன் டொலர்கள் அபராதமாக விதிக்கப்படலாம் எனவும் அந்த தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது.
 
அதேவேளை ராஜ் ராஜரட்னத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இருந்த தொடர்புகள் பற்றி புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.