உங்கள் மக்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யுங்கள் – மலேசிய பிரதமர்

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தியிலும் ஏனைய அனைத்து துறைகளிலும் தமிழர்களை இணைத்து கொண்டு அவர்களுக்கு சகல வாழ்வுரிமைகளையும் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

malaysia-flagஇலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அந்த நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க முடியும் எனவும் நஜீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதியாக சுசிலோ பம்பாங் நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதில் மலேசிய பிரதமர், அவுஸ்த்ரேலிய பிரதமர் கெவின் ரூட் கலந்துகொண்டார். இருநாட்டு பிரதமர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். படகுகளில் மக்கள் கடத்தப்படுவதை குறை மலேசிய உதவ வேண்டும் என அவுஸ்த்ரேலிய பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிவரவு விதிகளை கடுமையாக்க வேண்டும்.வீசா வழங்குவதை கடுமையாக்க வேண்டும். அத்துடன் படகுகளில் மக்கள் கடத்தப்படுத்த வேண்டும் எனவும் கெவின் ரூட் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது கருத்துவெளியிட்ட மலேசிய பிரதமர், அவுஸ்த்ரேலிய அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை மலேசியா பரீசிலிக்கும் எனக் கூறியுள்ளார்.மலேசியாவை தளமாக கொண்டு
அதிகளவான வெளிநாட்டவர்கள்  படகு முலமாக அவுஸ்த்ரேலியாவுக்கு செல்கின்றனர்.

இந்த சட்டவிரோத பயணங்களின் போது, இலங்கைத் தமிழர்கள் தலா 12 ஆயிரம் டொலர்கள் முதல் 20 ஆயிரம் டொலர்கள் வரை கட்டணமாக செலுத்தி அவுஸ்த்ரேலியாவுக்கு செல்கின்றனர். இதற்கு தீர்வுகாண வேண்டும். இலங்கைத் தமிழர்களை நாட்டின் அபிவிருத்தியிலும் அனைத்து துறைகளில் இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படி இணைத்து கொண்டால், அங்கிருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.