ஜீஎஸ்பி வரிச்சலுகையை இழந்தமைக்கு அரசின் செயற்பாடுகளே காரணம்

“ஜீ. எஸ். பி. வரிச்சலுகை கிடைக்கமல் போனதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். அதை பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் எவ்வித அக்கறையும் காட்டுவதாகத் தெரியவில்லை” என ஐதேக பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

unplogoஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஜீ. எஸ். பி. வரிசலுகை பெறுவதும் கூட, அரசியல் மேடைப் பேச்சு போன்றே கருதி செயற்படுவதாகத் தெரிகிறது. இதனால் 150 டொலர் மில்லியன் நிதி நாட்டுக்குக் கிடைக்காமல் போகவுள்ளது.

இது பிரச்சினையற்ற ஒரு விடயம் என அரசாங்கம் கூறுகிறது . அரசுக்கு இது பிரச்சினை இல்லை என்றாலும் மக்களுக்கு இது ஒரு பாரிய பிரச்சினையே.

இத்தருணத்தில் கிராமங்களில் ஐதேக உருவாக்கிய கைத்தொழில்கள் இன்று சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் லட்சக் கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி காணப்படுகின்றனர். கிராமங்களுக்குக் கிடைத்து வந்த வருமானங்கள் அனைத்தும் இல்லாமல் போயுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் உத்தரவாதத்துடன் செயற்பட வேண்டும்.

மக்களின் உரிமைகளைக் கருத்தில் கொள்ளாததும், 17 ஆவது சீர்திருத்தத்தை அமுல்படுத்தாதிருப்பதும், வேண்டுமென்றே ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதுமே ஜீ. எஸ். பி. வரிச்சலுகையைப் பெறுவதற்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.