ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் இந்த வரைவு எதற்க்கு?

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை மீறல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதன் விசாரணை அறிக்கையில் தெரிவித்திருந்தது ஆனால் நேற்று அந்த விடயங்களை இலங்கை சரி செய்யவேண்டுமெனில் எதனை கடைப்பிடிக்கவேண்டும் என்ன செய்யவேண்டும் என பல விடயங்களை உள்ளடக்கி ஒரு வரைபு உருவாக்கப்பட்டுள்ளது.

eu-flagஅதில் இலங்கை அரசானது,

  • 13 வது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்.
  • தடுப்பு முகாமில் உள்ள மக்களுக்கு நல்ல தண்ணியும் சாப்பாடும் கொடுக்கவேண்டும்
  • குற்றவாளிகளையும், சாட்சி வழங்குவோரையும் காபாற்றுவதற்கான சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

இவையே முக்கியமாக காணப்படுகின்றன அத்துடன் தமிழ் தலைவர்களை இந்த முயற்சிகளுக்கு முழுமனதுடன் ஆதரவு தரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் கடந்த 20 வருடமாக பேசப்படுவதுடன் இலங்கை அரசாங்கம் பேச்சிலும் சரி, எழுத்திலும் சர், ஏன் நடைமுறையில் கூட எதனையும் செய்வதும் இல்லை. இது இவ்வாறு இருக்க ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இந்த குப்பைகளை மீண்டும் கிளருகின்றது?

தமிழர்கள் பலம் இழந்து விட்டார்கள் என்பதனாலா? அல்லது இந்திய, இலங்கை நாடுகளின் திட்டங்களுக்கு முட்டு கொடுத்து தமது நலன்களை நிறைவேற்றுவதற்காகவா?

சரி இவை ஒருபுறம் இருக்க போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட மக்களுக்கும், சரணடைந்த போராளிகளை கொல்லப்பட்டமைக்குமான போர்குற்றம் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் ஏன் ஒன்றும் பேசவில்லை?

அல்லது மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக கூறும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்காக நல்ல தண்ணியும் சாப்பாடும் கொடுத்தால் சரி என்பதா உங்களது நியாயம்?

நல்ல தண்ணியும் சாப்பாடும் கொடுப்பதற்கு நீங்கள் மில்லியன் கணக்கில் செலவளித்து மா நாடு கூட தேவையில்லை. அங்குள்ள மக்களுக்கு அல்லது நிறுவனக்களுக்கு நிதியினை கொடுத்தால் அவர்கள் செய்வார்கள்.

இறுதியாக தடுப்பு முகாமில் வைத்திருக்கின்ற மக்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பேரில் வைத்திருகின்ற அனைவருக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் உங்களால் கேட்கமுடியவில்லை அல்லது இவற்றை செய்தால் தான் நாம் ஜி.எஸ்.பி தருவோம் எனக்கூட ஏன் உங்களால் கேட்கமுடியவில்லை?

எங்களுக்கு தெரியும் பிரபாகரன் என்ற ஓர் பெரு மனிதன் இல்லை அவர் திரும்ப வரப்போவதில்லை என்ற எண்ணம் தான் அனைவரும் தாங்கள் நினைத்தபாட்டில் எதனையும் செய்யலாம் என்ற திமிர்.

ஆனால் தமிழர்களாகிய நாங்கள் ஒன்றைமட்டுமே சொல்லமுடியும் உங்கள் எண்ணங்களும் நடவடிக்கைகளும் மிக குறுகிய ஆயுட்காலம் கொண்டவை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.