அமெரிக்காவால் தயாரிக்கபட்ட இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்குமிடையேயான மோதலின் இறுதி மாதங்களில் இடம் பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட உரிமை மீறல் அல்லது மனிதாயத்திற்கெதிரான குற்றங்களும் அது தொடர்பான தீங்குகளும் இடம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கத் திணைக்களம் அமெரிக்க காங்கிரஸிடம் கையளித்துள்ளது என இலங்கையில் உள்ள ஐக்கிய அமெரிக்காவின் தூதரகம் விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

us-congressகாங்கிரஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையின் ஒரு பிரதி இலங்கைத் தூதுவரகத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.
அவ்வறிக்கையில்  மோதலில் ஈடுபட்ட இரண்டு தரப்பாரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடயங்கள் அனைத்தும் விரிவான அளவில் முதல்தர மற்றும் இரண்டாம் தர தகவல் மூலங்களில் இருந்து  தொகுக்கப்பட்டுள்ளது.  எனினும் இவ்வறிக்கை சட்ட ரீதியான அல்லது திட்டவட்டமான முடிவுகள் எவற்றையும் குறித்துக்காட்டவில்லை. இவ்வறிக்கையில் குறித்துக்காட்டப்பட்டுள்ள பெரும்பாலான சம்பவங்கள் போர்ப்பிராந்தியத்திற்கு அண்மையாக இருந்தவர்களிடம் இருந்தும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்துள் இருந்தவர்களிடமிருந்தும் நேரடியாகப் பெறப்பட்டுள்ளன.
அரசுக்கெதிரான சக்திகளிடமிருந்து வரும் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை அரசுக்கு இருக்கிறது என்பதை ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. அதேவேளை அரசும் அரசு சாரா சக்திகளும் பொதுமக்களை ஆயுத மோதல்களிலிருந்து பாதுகாப்பது உட்பட்ட  சர்வதேச சட்ட விதிகளுக்கு இணங்கிச் செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
தேசிய இணக்கப்பாட்டின் பிரிக்க முடியாத ஒரு அம்சம் கடப்பாடு என்பது. இலங்கை அரசாங்கம்  அக்கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான சாத்தியமான  பொறிமுறையை அடையாளம் கண்டுள்ளதா என்பதை ஐக்கிய அமெரிக்கா அவதானித்து வருகிறது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Embassy of the United States of America
Colombo

PRESS RELEASE
Release no. 20091022

U.S. Embassy Statement on Report to the U.S. Congress

Colombo, October 22, 2009: The United States Department of State delivered to Congressional Appropriations Committee staff yesterday a report detailing incidents that allegedly occurred during the final months of the conflict between the Government of Sri Lanka and the terrorist organization LTTE that may constitute violations of international humanitarian law or crimes against humanity and related harms.  The Department of State prepared the report pursuant to a Congressional request and also provided a copy to the Sri Lankan Embassy. 

The report compiles alleged incidents, as reported by a wide range of primary and secondary sources, involving both sides in the conflict.  It does not reach any legal or factual conclusions.  Information concerning the majority of incidents cited in this report originated in first‐hand accounts communicated by persons from within the government‐declared No Fire Zones and locations close to the fighting. 

The United States recognizes a state’s inherent right to defend itself from armed attacks, including those by non‐state actors, such as a terrorist group like the LTTE.  The United States also expects states and non‐state actors to comply with their international legal obligations, including the obligation to protect civilians in armed conflict. 

Accountability is an essential component of national reconciliation.  The United States looks to the Government of Sri Lanka to identify an appropriate and credible mechanism and initiate a process for accountability.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.