அமெரிக்கா எம் மீது குற்றம் சாட்டி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது கவலைக்குரியது – இலங்கையின் வெளிநாட்டமைச்சு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுத் தொடர்பாக அன்மையில் அமெரிக்கக் காங்கிரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கம் தொடர்பான நிரூபனமற்ற ஆதாரங்களில்லாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது என வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

srilanka-governmentஇலங்கையில் பேர் குற்றங்கள் இடம்பெற்ற கபலப்பகுதியில் வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்துவந்த தமிழ் சமூகத்தினரையும் ஏனைய சமூகத்தினரையும் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கும் மனிதாபிமானப் பணியினையே எமது படைவீரர்கள் மேற்கொண்டனர் என வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கக் காங்கிரசினால் வெளியிடப்பப்பட்டுள்ள அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை மக்கள் எதிர்பார்த்திருக்கும் சமாதனம் மற்றும் மீழ்கட்டுமானப்பாணிகளை அமெரிக்காவின் இக்குற்றச்சாட்டு பாதிக்கும். இலங்கை மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கான சூழ்நிலை தற்போது உருவாகிவருன்ற நிலையில் இலங்கையின் இறைமையைப்பாதிக்கும் வகையில் மெரிக்கா நடந்துகொள்ளக் கூடாது என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் இலங்கையில் உள்ள அமெரிக்கத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் செவ்வாக்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள இவ்வாதாரமற்ற குற்றச்சாட்டு இலங்கை அரசாங்கத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்டச்சண்டையின்போது சர்வதேச மனிதவுரிமை சட்டங்களை மீறி இடம்பெற்ற சம்பவங்களையே சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் தயாரிக்கபட்ட இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.