மேலும் தமிழர்கள் 32 ஆஸ்திரேலியாவால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்

படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவை நோக்கி புகலிடம் கோரி வந்த 35வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.

apec_1ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானம் இந்தப் படகை கண்டுபிடித்து கடற்படைக்கு உத்தரவிட்டு தடுத்து கிறிஸ்துமஸ் தீவுக்கு திருப்பி விட்டது. கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களை ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அங்குள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அனைவருக்கும் சுகாதார சோதனைகளும் நடத்தப்பட்டன. இவர்களையும் சேர்த்து தற்போது கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1090 ஆக உயர்ந்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.