இந்தியா இலங்கை எனும் புது எதிரியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது

இந்தியாவுக்கு முக்கிய எதிரியாக இலங்கை மாறக் கூடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

ramadஇதற்குத் தீர்வாக மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது அவர்களிடம் ஏ.கே. 47 ரக துப்பாக்கி போன்ற தற்காப்பு ஆயுதங்களைக் கொடுத்து அனுப்ப வேண்டும். கரைக்கு வரும்போது ஆயுதங்களைக் காவல் நிலையங்களில் ஒப்படைத்துவிடும்படி சொல்லலாம்.

இதைச் செய்தால்தான், தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியும்.

இந்தியக் கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களுக்காக இதுநாள்வரை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக்கூட தகவல் கிடையாது. அப்புறம் எப்படி இவர்கள் கடலில் மீனவர்களைப் பாதுகாப்பார்கள் என்று இனியும் நம்புவது?

இதுவரை கொடுத்துள்ள ரூ. 1,500 கோடியை எதற்குப் பயன்படுத்தினார்கள் என்று, இலங்கையிடம் இந்தியா கேட்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தவே இந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு ஏற்கெனவே மூன்று பக்கங்களிலும் எதிரிகள் உள்ளனர். ஆனால், நான்காவதாக, தென் திசையிலுள்ள இலங்கைதான் பிற்காலத்தில் முக்கிய எதிரியாக வரக் கூடும். இந்தியா இதை உணர வேண்டும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.