அமெரிக்க காங்கிரஸின் அறிக்கையில் பிழையில்லை – அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம்

வடகில் அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அண்மையில் நிறைவடைந்த மோதல்களின் போது யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிழையில்லை என இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

capitolusஇறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற காலத்தில் யுத்த சூன்ய மற்றும் யுத்த வலயங்களில் வசித்த நபர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்பயைடாகக் கொண்டே அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அரசாங்கப் படையினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டிருக்கலாம் என அமெரிக்க காங்கிரஸ் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
 
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயங்களிலிருந்தே இந்த அறிக்கைக்கு அதிக தகவல்கள் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டியது மிகவும் இன்றிமையாததென அமெரிக்க காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.