துணுக்காயப் பிரதேசத்தல் 2027 பேர் குடியமத்தப்பட்டனர்: விரைவில் 40 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படுவர் – அரசாங்கம்

அனைத்துலக சமூகத்தின் அழுத்தம் ஒரு மாத காலத்தினுள் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த இடம்பெயர்ந்த 40 ஆயிரம் ஏதிலிகள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

thunukkai_hospitalமுல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் தவிர்ந்த வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் ஒரு மாதகாலத்தினுள் குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக இன்று வியாழக்கிழமை 5960 இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாத் தடுப்பு முகாங்களில் இருந்து வவுனியா மாவட்டம், மன்னார் அடம்பன், முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த துணுக்காயப் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில்; தங்கவிடப்பட்டுள்ளனர்.

துணுக்காய்ப் பிரதேசத்தைச் சேர்ந்த 297 குடும்பங்களைச் சேர்ந்த 1027 பேர் இன்று வியாழக்கிழமை குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் வயது குறைந்தவர்களும், இளைஞர் மற்றும் யுவதிகளும் சிறீலங்காப் படையினரால் புனரமைப்பு எனக்கூறிக்கொண்டு தென்னிலங்கை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.