இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கைக்கு யப்பான் அழுத்தம் கொடுக்காதது ஏன்?

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உரிய தீர்வுத் திட்டங்களை வழங்குமாறு ஜப்பானிய அரசாங்கம், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

human_rights_great-840x554250,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறு ஜப்பானியர்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
 
புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள ஜப்பானிய அரசாங்கம் இலங்கை மனிதாபிமான நிலைமைகள் குறித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தக் கோரிக்கை தொடர்பான கடிதமொன்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கட்சுயு ஒக்கடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளினாலும், அரசாங்கப் படையினராலும் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கைக்கு உதவி வழங்கும் முக்கிய நாடு என்ற வகையில் ஜப்பான் காத்திரமான அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மனித உரிமை கண்காணிப்பகம், அஹிம்சை சமாதானப் படையணி, ஹியூமன் ரைட்ஸ் நவ், சர்வதேச மன்னிப்புச் சபை, சகல ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட முக்கிய மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.
 
முகாம் மக்களை விடுவிப்பதற்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வல்லமை ஜப்பானிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை நடாத்தப்படுவதற்கு ஜப்பான் வலியுறுத்த வேண்டுமென குறித்த மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.