ஜிஎஸ்பி பற்றி பேசியபோது அன்று அலட்சியப்படுத்திய அரசு, அதன் விளைவை இன்று அனுபவிக்கின்றது

“நாட்டில் மனித உரிமை மீறப்படும்போதெல்லாம், நான் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறிய போதும் மகிந்தவும் அவருடைய சகோதரர்களும் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

எல்லா கலந்துரையாடல்களின் போதும், ஜிஎஸ்பி சலுகையைப் பற்றிப் பேசினால் அதனை அலட்சியப்படுத்தி விடுவர். அதன் விளைவை இன்று அவர்கள் அனுபவிக்கின்றனர்” என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2064Mangala_Press_Jராஜகிரியவிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது நாட்டில் முக்கிய விடயமாகக் கருதப்படுவது ஜிஸ்பி சலுகை தொடர்பான விடயமே. இச்சலுகை தொடர்பாகத் தற்போது ஐரோப்பிய ஒன்றியம் கலந்தாலோசித்து வருகின்றது.

அதாவது சில காரணங்களால் ஜிஎஸ்பி சலுகையைப் பெற்று கொள்வதில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஜிஎஸ்பி சலுகை கிடைக்கப் பெறுமாயின் அது நாட்டு மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். இருப்பினும் இதில் சில மாற்றங்கள் தற்போது ஏற்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு ஜிஎஸ்பி சலுகை தொடர்பான உடன்படிக்கையில் 16 நாடுகளுள் இலங்கையும் உள்ளடக்கப்பட்டது.

ஜிஎஸ்பி சலுகையானது எல்லா நாடுகளுக்கும் கிடைக்கப் பெறுவதில்லை. வறிய நாடுகளுக்கே வழங்கப்படுவதோடு அந்நாட்டின் நிலை பற்றி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை பெற்றதன் பின்னரே வழங்கப்படும்.

ஜிஎஸ்பி நமது நாட்டுக்கு இது கிடைக்கப் பெற்றிருந்தமை மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

ஆனால் இன்று அது கைநழுவி போய்விடும் போல் உள்ளது. இலங்கைக்குக் கிடைத்த ஜிஎஸ்பியானது மொங்கேலியாவுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 37 சதவீதமான வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் செலுத்துகின்றது. 2004ஆம் ஆண்டு முதல் இன்றுவரை 3 அமெரிக்க பில்லியனை அது செலுத்தியுள்ளது.

இவ்வாறான பல உதவி கிடைககப் பெற்றபோதும் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களால் இவை அனைத்தும் கிடைப்பது சந்தேகமாகவே உள்ளது” என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.