மீழ் குடியேற்றமா? அல்லது முகாம் மாற்றமா?

மன்னார் மாவட்டத்தில் நேற்று (22.10.2009) தொடக்கம் எதிர்வரும் ஒருவார காலங்கள் மீள் குடியேற்ற வாரமாக முன்மொழியப்பட்டிருந்த போதும் அது இன்று பிசுபிசுத்துப்போனதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

question_3dவடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் 48 ஆயிரம் வரையிலானவர்கள் குடியேற்றப்படுவர் எனவும் மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியூதின் தெரிவித்திருந்த போதும் அது அவ்வாறு இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  
 
நாட்டின் வட பகுதியில் அரச படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் வசித்துவரும் நிலையில் அம்மக்களை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றியே ஆகவேண்டும் எனும் இறுக்கமான நிலை அரசாங்கத்திற்கு தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் நிவாரணக் கிராமங்கள் எனும் போர்வையில் முட்கம்பி வேலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில்; வசித்துவரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதற்காக கட்டங்கட்டமாக அழைத்துவரப்படுகின்றார்கள்.
 
இவ்வாறு இதுவரையில் அழைத்துவரப்பட்டவர்கள் மன்னார் இலுப்பைக்குளம் மற்றும் ஜீவநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு பின் அங்கிருந்து அவர்கள் சொந்த இடங்களான மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். ஆயினும் மீள்குடியேற்ற வாரத்தின் முதல் தினமாகிய இன்று ஏறத்தாழ 1500 வரையிலானவர்களே மீள்குடியேற்றத்திற்காக அழைத்து செல்லப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
 
மீள் குடியேற்ற வாரத்தில் நெடுங்கண்டல், பாலைக்குழி, பாலைப்பெருமாள்கட்டு, பாப்பாமோட்டை கண்ணாட்டி, பரப்புக்கடந்தான், சொர்ணபுரி, அடம்பன், ஆட்காட்டிவெளி, ஆண்டாங்குளம், கருங்கண்டல், பரப்பாங்கண்டல், காத்தான்குளம், மற்றும் மாளிகைத்திடல், ஆகிய பகுதிகளில் மக்கள் கட்டங்கட்டமாக மீள் குடியேற்றப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதும் நேற்று பரப்பாங்கண்டல், ஆண்டாங்குளம், மற்றும் அடம்பன், பகுதிகளிலேயே இவர்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
 
ஆயினும் எவரும் தத்தமது சொந்த வீடுகளுக்குச்சென்று குடியமர்வதற்கான எந்த வொரு அடிப்படை வசதிகளும் இதுவரையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றே தெரியவருகின்றது.
 
இதேவேளை நேற்றய தினம் ஆரப்பிக்கப்படடடிருக்கும்; மீள்குடியேற்ற வாரத்தில் முதற் கட்டமாக மன்னார் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பரப்பாங்கண்டல் பகுதியில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 330பேர் மீள் குடியேற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் 100 பேரளவிலேயே மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக தெரிகின்றது. மீள்குடியேறியவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் விநியோகம் கூட அரசாங்கத்தினால் ஒழுங்காக திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது.
 
 இந்நிலையில் அடம்பன் பகுதியில் குடியேற்றப் பட்டிருப்பவர்களுக்கான இன்றய இரவு உணவினை மன்னாரில் இயங்கி வரும் சர்வோதயா எனும் அமைப்பே அவசரஅவசரமாக அனுப்பி வைத்திருப்பதாகவும் பிந்திய தகவலின் படி தெரிய வருகின்றது.
 
இதற்கிடையில் நேற்று இடம்பெற்றிருக்கும் மீள் குடியேற்ற நிகழ்விற்கு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் இராஜினாமா செய்யாத பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரன சேவைகள் அமைச்சர் றிசாட் பதியூதின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் புளொட் அமைப்பின் தலைவா சித்தாத்தன் வன்னி பிராந்திய இராணுவ கட்டளை அதிகாரி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தின் உள்ளூ அரச அதிகாரிகள் உள்ளடங்களான இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
 
மன்னார் மாவட் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மீள்குடியேற்ற நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் கத்தோலிக்க குருக்கள் எவரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை ஆயினும் இறுதி நேரத்தில் இந்நிலைப்பாட்டினை அறிந்து கொண்ட படைத்தரப்பினரே ஆயரிற்கான அழைப்பினை விடுத்திருந்தமைக்கு அமைய மன்னார் ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயேப்பு ஜோசேப்பு மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோh கவந்து கொண்டிருக்கின்றனர்.
 
நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நிகழ்வில் தனிச்சிங்களத்திலான தேசியகீதமே இசைக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாட்ட கல்வித்திணைக்களத்தின் உத்தரவிற்கமையவே இது நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. மன்னார் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளின் பிள்ளைகள் கடந்த சில தினங்களாக தேசிய கீதத்தினை சிங்கள மற்றும் தமிழ் மொழியில் பழகியதாகவும் ஆயினும் இன்றைய நிகழ்வில் மிகுந்த நெருக்குதல்களுக்கு மத்தியில் தனிச்சிங்களத்திலேயே அதனை பாடுவதங்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
 
இங்கு கூறப்பட்ட விடயங்கள் வவுனியா மன்னார் பிரதேசங்களை நன்கு அறிந்த வாழ்விடமாகக் கொண்ட ஒருவரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.