வவுனியாவில் மீண்டும் தொலைபேசி மிரட்டல் மூலம் கப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது

வவுனியாவில் மீண்டும் தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் வாங்குதல் தலைதூக்கியுள்ளது.  இதனால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது கடந்த சில தினங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என வவுனியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் நபர் தான் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என அறி;முகப்படுத்தியே உரையாடலை தொடர்வதாக மக்களிடமிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

blackmail-messageதொலைபேசி மூலம் கடுமையான தொனியில் மிரட்டுவதாகவும் பணம் தர மறுத்தால் கடந்த காலத்தில் வவுனியாவில் நடந்த கொலை சம்பவங்கள் சிலவற்றை அவர்கள் நினைவுபடுத்துவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து மக்கள் பழைய நிலைக்கு திரும்ப எத்தணிக்கும் நேரத்தில் தொலைபேசி மிரட்டல் பலரையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த காலங்களில் வவுனியாவில் கப்பம் கேட்டு பல குழுக்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது இவ்வாறு இயங்கி வந்த குழுவில் விடுதலை புலிகள் என்றும் கருணா குழு பிள்ளையான் குழு வென்றும் தெரிவித்த இந்த குழுவினர் தாம் ஜோசப் முகாமில் இருந்தே தொடர்பு கொள்ளதாவ வெளிப்படையாக தெரிவித்து வந்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இயங்கி வந்த குழுக்கள் இராணுவ தரப்பினரோடும் நல்ல உறவை பேணிவந்துள்ளார்கள் இவ்வாறு பயத்தினால் கப்பம் கொடுத்தவர்கள் ஜோசப் முகாமுக்கு முன்னால் கண்டி வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் வைத்தே கொடுத்தமை தகவல்களாக வெளிவந்திருந்தன. 

இதற்கிடையில் வவுனியாவில் கப்பம் வாங்கினார்கள் என்ற குற்றசாட்டில் ஒரு பெண் உட்பட மூவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளார்கள். இவர்கள் வவுனியா மாவட்ட நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள் விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.