ராஜ் ராஜரத்னத்தை குற்றவாளியாக்கும் இலங்கையின் சூட்சியில் கே.பி பகடைக்காய் ஆக்கப்பட்டுள்ளார்

சமீபத்தில் நிதி மோசடி தொடர்பாக அமெரிக்க FBI யால் கைதான தொழிலதிபர் ராஜ் ராஜரட்னம், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் எனக் கே.பி கூறியுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

kp_rajaகே.பி என்று அழைக்கப்படும் கே.பத்மநாதன் கோலாலம்பூரில் கைதுசெய்யப்பட்டு இலங்கை கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதுவரை அவர் இலங்கை அரசாங்கத்தின் பிடியில் தான் உள்ளாரா என்பது சந்தேகமான விடையமே. புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களான தயா மற்றும் ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோரை, தொலைக்காட்சியில் காண்பித்த இலங்கை அரசு, புலிகளின் அதி முக்கிய தலைவரான கே.பியை இன்னும் வெளியில் காட்டவில்லை.

இது இவ்வாறு இருக்க அமெரிக்காவில், நிதி மோசடி தொடர்பாக FBI யால் கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம் கைதுசெய்யப்பட்டர். அத்துடன் இவர்மேல் தொடரப்பட்ட பல குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பொலிசார் படாத பாடு படும் வேளை, இவர்மீது புதிதாக குற்றச்சாட்டுகளைச் சுமத்த இலங்கை அரசு முயல்வதாகத் தெரிகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.