திருமாவளவன் திமுகா-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறார்?

தி.மு.கா காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திருமாவளவன் நாளை வெளியேறுவதாக இந்தியாவின் அரசியல் தரப்புக்களில் இன்று இரவு பலமான செய்திகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

thiruma_questionஇலங்கைக்கு விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கை முகாம்கள் மற்றும் மக்களின் உண்மை நிலமைகள் குறித்து  தனது அதிர்ப்தியை உரிய முறையில் வெளியிடவில்லை என்ற குற்ற உணர்வால் பாதிக்கப்பட்ட திருமாவளவன் ஊடகங்களுக்கு தனியான அறிக்கைகளை வெளியிட்டும் செவ்விகளை வழங்கியும் வந்தார்.

இந்த நிலையில் இது குறித்து கடுமையாக வெறுப்படைந்திருந்த ஆளும் கூட்டணியினர் இன்று இந்தியப் பிரதமரைச் சந்திக்கச் சென்றமை குறித்து திருமாவளவனுக்கு அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என தெரிய வருகிறது. இலங்கை விஜயம் குறித்து இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் திருமா இடம்பெறுவதனை விசேடமாக முதல்வர் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பிரதமருடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்காததுடன் திருமாவளவன் அவமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் விரக்த்தி உற்ற திருமாவளவன் நாளை ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் திருமாவளவனோ திமுகாவோ அல்லது காங்கிரஸோ இது குறித்து எந்தக் கருத்துக்களையும் இதுவரை வெளியிடவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.