வடக்கு கிழக்கில் காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் ‐ ஜே.வி.பி.

வடக்கு கிழக்கு பகுதிகளில் காணிகளை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டம், தடுத்து நிறுத்தப்பட வேண்டியதொன்றென ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு இடம்பெயர் மக்கள் முழுமையாக குடியமர்த்தப்படுமு; வரையில் காணிகளை விற்பனை செய்யக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.

jvp-logoவடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது ஜே.வி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
 
காணிகளை விநியோகம் செய்தால், இடம்பெயர்ந்து வாழும் மக்களை தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவதில் சிக்கல் நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கு கிழக்கில் காணிகளை கொள்வனவு செய்வது குறித்தே வர்த்தக சமூகம் தற்போது அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தில் தங்களது சொந்தக் காணிகளை இழந்த அப்பாவி வறிய மக்கள் தொடர்பில் அனைவரும் கனத்திற் கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதே தற்போதைய காலத்தின் முதன்மை கடப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனினும், இந்த அரசாங்கம் அபிவிருத்தி நோக்கியப் பயணத்தைவிடவும், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் அதிக நாட்டம் காட்டி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மூவினங்களையும் சேர்ந்த கடும்போக்குடைய அரசியல்வாதிகள் நாட்டை வேறும் திசை நோக்கி நகர்த்த முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டு மக்கள் மூன்று கல் அடுப்பைப் போன்று பிரிந்து இருப்பதனையே சில கடும்போக்குடைய அரசியல் தலைவர்கள் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, மக்கள் காணிகளை கொள்வனவு செய்வதனை தடுத்து நிறுத்தக் கூடிய அதிகாரம் அரசாங்கத்திற்கு இல்லை என அனர்த்த நிவாரண சேவை அமைச்சர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
 
கொழும்பு மற்றும் கண்டியைச் சேர்ந்த அதிகமானனோர் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் காணிகளை கொள்வனவு செய்து வருவதாத் தெரிவிக்கப்படுகிறது.
 
நீண்ட கால குத்தகை அடிப்படையில் வர்த்தகர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
காணிப் பங்கீடு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் சகல சமூகங்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டுமென அர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.