சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை ‐ கோத்தபாய

தனிப்பட்ட அரசியல் லாபம் கருதி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளில் பெயர்களை பயன்படுத்தி, பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, காவற்துறை மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

gotas_journalism_finalஇது குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிடிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி, சிலர் அரசியலில் ஈடுபட்டு வருவதாக தற்போது, பத்திரிகைகள் மற்றும் இணையங்களில் பொய்யான செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 120 பிரிவிலும், இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் விசேட வர்த்தமானியிலும், தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால விதிகளிலும்,  இராணுவச் சட்டங்களிலும் விசேட ஏற்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அந்த சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் எந்தவொரு ஊடகத்தில் எழுதப்படும் அல்லது வாசிக்க எண்ணும் வார்த்தை மற்றும் சமிக்ஞைகள் உள்ளிட்ட விடயங்கள், அரசாங்கத்திற்கு எதிராகவும், உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருத்தல் சட்டத்தின் செயற்படுத்தும் போது கோபத்தையோ, அகௌரவத்தை ஏற்படுத்தினாலோ, ஏற்படுத்த முயற்சித்தாலோ சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றை சட்டத்திற்குப் புறம்பான வகையில் மாற்றம் செய்து மக்கள் மத்தியில் எதிர்ப்புவாத உணர்வுகளை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதானது தண்டனைக்குரிய குற்றமாகும்.
 
அத்துடன் இராணுவ சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு அரசியலில் ஈடுபடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவ்வாறான சூழ்நிலையின் கீழ் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட அரசியல் இலாபம் கருதி பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வது சட்;ட விரோதமானது.
 
இதனால், அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதை நிறுத்துமாறும் அதனை நிறுத்தத் தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக அறிவித்துள்ளது. இந்தச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் காவல்துறையினர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்பவதாகவும் இதனால் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.