ஐ. நா அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரி மலேசியாவில் தடுப்பில் உள்ள தமிழீழ தமிழர்கள் உண்ணாவிரதம்

மலேசியாவில் 100 இற்கு மேற்பட்ட  தமிழீழ தமிழர்கள் சட்ட ரீதியற்ற முறையில் இருப்பதாக அவர்களை தடுப்பு காவலில் வைத்திருக்கின்றது மலேசிய அரசு. இந்த தடுத்து வைக்கப்பட்ட மக்கள் தாயகத்தில் யுத்த சூழல்களால் இடம்பெயர்ந்து அங்கு வந்தவர்கள்.

hungerstrikeஇவர்கள் உத்தியோக பூர்வ ரீதியாக மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு அனுமதி கோரி பல தடவைகள் விண்ணப்பித்தாலும் மலேசிய அதிகாரிகள் அதற்கு அனுமதிகவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தில் தம்மை அகதி தஞ்சம் வேண்டி பதிவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தடுத்து வைக்கபட்டோரில் 06 பேர் உண்ணா நோன்பு இருந்து வருகின்றனர்.

இந்த விடயமாக மலேசியாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர் திரு கனகராசா அவர்கள் தெரிவிக்கையில் தாம் இது விடயமாக தொடர்ந்து ஐ. நா அதிகாரிகளுடன் பேசிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.