ஓசியன் லேடியில் சென்ற 76 பேரில் ஒருவர் கைது ஏனையோர் விடுவிப்பு

ஓசியன் லேடி கப்பலில் கனடா சென்ற 76 பேரில் ஒருவர் கனேடிய ரோயல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏனையோர் 48 மணி நேர விசாரணை முடிந்து அடுத்த கட்ட விசாரணைக்காக 07 நாட்கள் பிரிதொரு தடுப்பு முகாமிற்கு அனுப்ப பட்டுள்ளனர்.

Oceanladyகுறிப்பிட்ட கைது செய்யப்பட்ட தமிழர் என்ன நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பதனை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர். எனினும் இலங்கை அரசாங்கம் கொடுத்த தகவல்களை அடிப்படையாகவைத்தே கைது செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வருகின்றது.

ஏனைய 75 பேரும் வான்கூவரில் உள்ள மாபிள் ரிட்ஜ் தடுப்பு நிலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.