வணங்கா மண் உதவிப் பொருட்கள் வவுனியா முகாம்களுக்குள் செல்கின்றன

இலங்கையின் வடபகுதியில் போர் உக்கிரமடைந்திருந்த வேளையில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்காக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு தற்போது வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

vanagamanகேப்டன் அலி என்ற கப்பலில் அனுப்பப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் முதலில் இலங்கை அரசாங்கத்தால், துறைமுகத்துக்குள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவே, இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அவற்றை கொழும்புக்கு கொண்டு செல்ல உதவியது.

இருந்தபோதிலும் சில மாதங்கள் வரை அந்தப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்திலேயே தேங்கிக்கிடந்தன.

ஆனால், தற்போது இலங்கை ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அவை துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு தற்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு விநியோகத்துக்காக அனுப்பப்படுவதாக, நிவாரண சேவைகளுக்கான இலங்கை அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

27 வாகனங்களில் வவுனியாவுக்கு அனுப்பப்படும் இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்பதால், அவை கெடாமல் பயன்படுத்தக் கூடிய வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.