திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 527 இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 26 நாட்களாக அண்டியபுளியங்குளம் பாடசாலையில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 527 இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்காக தமது சொந்த இடங்களுக்கு அழைத்து செல்வதாக கூறப்பட்ட போதிலும், அவர்கள் கடந்த 26 நாட்களாக அண்டியபுளியங்குளம் பாடசாலையில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள கூட்டு மனிதாபிமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

question-mark8இவ்வாறு மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 304 பேர், வவுனியாவில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கியுள்ளனர். இவர்களில் கர்ப்பிணிப் பெண்களும் இருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை இடம்பெயர்ந்தவர்களை தேடியறியும் அமைப்பினால், அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுவதாவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.