திருமாளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக?

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் சந்தித்திருக்கும் வெளிப்படையான முதல் நெருக்கடி இதுவே. இனியும் திமுகவிற்குப் பணி காங்கிரஸ் கட்சியிடம் கைகட்டி நிற்க வேண்டுமா? அல்லது தோள்தட்டி தன் மானத்தோடு விலகி தனித்து அரசியல் செய்யலாமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளால் திருமாவளவனுக்கு உருவாகியிருக்கும் ஆசிட் டெஸ்ட் இதுதான்.

thiruma_questionஇலங்கைக்கு கூட்டணி எம்பிக்களை அனுப்ப மட்டுமே முடியும் அரசுக் குழுவை அனுப்ப முடியாது என மத்தியா அரசு கைவிரித்த போது திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமே செல்லலாம் திருமாவளவன் வேண்டாம் அவர் வந்தால் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் காங்கிரசார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே இலங்கைக்குச் சென்றால் அக்குழுவுக்கு இலங்கை அரசின் ஆதரவுச் சாயம் பூசப்பட்டு விடும். அப்படியான சாயம் ஒன்று இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இக்குழுவில் திருமா இருக்க வேண்டும் என்று திருமாவளவனை கட்டாயப்படுத்தி குழுவில் சேர்த்தாராம் கருணாநிதி.

ஆனால் அதுவே திருமாவளவின் அரசியல் வாழ்ழில் ஒரு கரும்புள்ளியாக மாறும் என்பதை திருமா நினைத்திருக்க மாட்டார், அவருக்கும் இக்குழுவுடன் செல்வதில் தயக்கம் இருந்ததாம். அதை துவகக்த்தில் இருந்தே வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்., கொழும்பில் கூட ராஜபக்ஸவை சந்திக்க எம்பிக்கள் தயாரான போது திருமா தான் வர விரும்பவில்லை என்று மறுத்திருக்கிறார். திமுகவின் கனிமொழியும். டி.ஆர்.பாலுவுமே அவரைக் கட்டாயப்படுத்தி ராஜபக்ஸவை சந்திக்க அழைத்துச் சென்றதாகவும். அங்கே தனக்கு தர்மசங்கடம் நேர்ந்ததை குழுவில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களே நக்கலும் நையாண்டியுமாக டி.ஆர்.பாலுவிடன் சொல்லிச் சிரித்த போது கொழும்பில் வைத்தே குழுவுக்குள் சின்ன மனச்சஞ்சலமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் குழுவின் இலங்கை அரசுடனான அணுகுமுறை குறித்து திருமா கடும் அதிர்தி அடைந்துள்ளார்.
இக்குழுவோடு சேர்ந்து இவர்களின் குரலிலேயே தாமும் பேசினால் உலகத் தமிழர்களிடம் தன் பெயர் கெட்டு விடும் என்று நினைத்த திருமா கொழும்பில் இருந்த படியே தமிழகத்தில் பிரதான ஊடகம் ஒன்றிர்கு முகாம்களின் அவல நிலை குறித்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அத்துடன் கொழும்பு ஊடகங்களுக்கும் காரசாரமான நேர்காணலை கொடுத்தார்.

உங்கள் நண்பர் எங்கே?  என்று ராஜபக்ஸ வைத்த பொறிக்குள் சிக்கிய திருமா முகாம்கள் குறித்தாவது உண்மை பேசுவோம் என்று பேச, திமுக காங்கிரஸ் குழுவின் முகாம் பற்றிய அறிக்கைக்கும், திருமாவின் கருத்துக்களும் இடையில் பாரிய இடைவெளி இருந்திருக்கிறது. சென்னை சென்றதும் இக்குழு அறிக்கை கொடுக்கும் அதே நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தானும் ஒரு தனி அறிக்கையை கொடுப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து அறிக்கையையும் கொழும்பில் வைத்தே தயாரித்தும் விட்டார், திருமா.

ஆனால் திருமாவின் ஸ்டேட்மெண்ட்கள் குறித்து உளவு நிறுவனங்கள் மூலம் எச்சரிககையைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி கச்சிதமாக ஒரு காரியம் செய்தார். சென்னை விமான நிலையத்துக்கு எம்பிக்களை வரவேற்கச் சென்றார். அது உண்மையில் எம்பிக்களை வரவேற்கச் சென்றதல்ல திருமாவின் வாயை அடைப்பதற்காகத்தான் நேரடியாக தானே சென்று திருமாவை ஊடகவியளார்களிடம் இருந்து தனிமைப்படுத்தினார்.

ஆனாலும் ஆங்கில ஊடகம் ஒன்று திருமாவை எபப்டியோ நேர்காணல் எடுத்து அதுவும் பரபரப்பானது.

கருணாநிதிக்கோ இந்திய அரசின் இலங்கை அணுகுமுறைக்கு பாதகமான முறையில் இந்த நாடாளுமன்றக் குழுவின் பயணமோ அதன் அறிக்கையோ அமைந்து விடக் கூடாது என்கிற நெருகக்டி. திருமாவளவனுக்கோ இதுவரை கட்டிக் காத்து வந்த ஈழ நண்பன் என்ற பட்டம் பறிபோய் துரோகி என்ற முத்திரை விழுந்து விடுமோ என்ற அச்சம். அபப்டியான சுழலிலேயே இனியும் திருமாவை கூட்டணிக்குள் வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியுடனான தனது உறவைப் பாதிக்கும் என்று கருதிய கருணாநிதி திருமாவை மிக மிக அவமானகரமான முறையில் கழட்டி விட்டதுதான்.

இலங்கை சென்று திரும்பிய எம்பிக்கள் டில்லி சென்று பிரதமரைச் சந்திக்கச் சென்ற போது அந்த தகவலே திருமாவிற்குச் சொல்லப்படவில்லை. ஆனால் இலங்கைக்கே செல்லாத காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கொடுக்கிற மரியாதை தனக்குக் கிடைக்காதா? அப்படி என்றால் தாம் ஏன் இன்னமும் கருணாநிதிக்காக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கடுமையாகப் பேசி கூட்டணியை விட்டு வெளியேறுவதுதான் சரி என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

 ஆனால் திருமா கூட்டணியை விட்டு வெளியேறினால் ஜெயலலிதா தன்னை இணைத்துக் கொள்வாரா என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும். இன்னொரு பக்கம் ஆளும் திமுக வழக்கு மேல் வழக்குகளைப் போட்டு சிறுத்தைகள் கட்சியினரை துவள வைக்கும் அதிர்ச்சிச் செய்தி ஒன்றும் கட்சிக்குள் பரவிக் கிடக்கிறது. பாராளுமன்றத்திற்குச் சென்றால் ஈழ மக்களின் துயரை டில்லியில் ஒலிக்கலாம் என்று நினைத்துதான் டில்லி சென்றோம். ஆனால் அங்கும் பேச முடியவில்லை. தமிழ்நாட்டிற்குள்ளும் எதிர்கட்சிகள் குடைகிற கேள்விகளுக்கு இன்று வரை பதிலும் சொல்ல முடியவில்லை. தவிரவும் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்தது மாதிரிதான். இப்போதும் எப்போதும் டாக்டர் ராமதாசுக்கு ஈழம் பற்றிய தெளிவான கொள்கை இருந்ததில்லை.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு குரலிலும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு குரலிலும் பேசுவதுதான் ராமதாசின் வாடிக்கை.

ஆனால் திருமா ஈழக் கொள்கையில் ஒரே மாதிரிதான் பேசி வந்துள்ளார். அவர் எப்போது காங்கிரஸ் கூட்டணியில் கலந்தாரோ, அவர்கள் படுத்திய இழிவுகளை எலலம் தாங்கிக் கொண்டு மௌனமாக இருந்தாரோ அப்போதுதான் அவரது அரசியல் இமேஜ் அடிவாங்கத் துவங்கியது. அப்படியிருந்தாலும்; தன் மீது விழுந்துள்ள இந்தக் கறைக்கு திருமாவும் ஒரு காரணம்.

இது வலியப் போய் தானே தேடிக் கொண்டது. இதை எப்படி போக்குவது என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை அப்படி தன் மீதான களங்கத்தைத் துடைக்கத்தான். முள் வலி எழுதுகிறாரோ? அமாம் ஒரு வார இதழில் அடுத்த வாரத்தில் இருந்து தனது இலங்கைப் பயணம் குறித்து தொடர் எழுதுகிறாராம் திருமா.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.