ஐக்கிய நாடுகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது
 
யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் கோரிக்கையை ஏற்க முடியாது என மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

mahinda-samarasingheமனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டதனைப் போன்றதொரு விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.
 
இலங்கைக்கு எதிராக பாதுகாப்புப் பேரவையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் நியாயமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ரூபர்ட் கொல்வில் பொறுப்பற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ரூபர்ட் கெல்வில் அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.