இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மை நிலை என்ன?

வடக்கு இடம்பெயர்ந்தோர்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், உண்மையில் சிலர் மீண்டும் வேறும் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

questionskvoor090500048கடந்த வியாழக்கிழமை பிரமாண்டமான விழா ஒன்றின் மூலம் மாந்தைப் பகுதியில் 6000 இடம்பெயர் மக்கள் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகவும், உண்மையில் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இடம்பெயர்ந்தோர்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிக்கை வெளியிட்ட போதிலும்,  சொந்த இடங்களுக்குச் செல்லவில்லை என குறிப்பிடப்படுகிறது.
 
சிலர் மீண்டும் அதே முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சிலர் வேறும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றும் நடவடிக்கை பிரமாண்ட விழவாக நடைபெற்றது.
 
யுத்தம் காரணமாக மக்களின் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நேரடியாக அவர்களை சொந்த வீடுகளில் மீள்குடியேற்ற முடியாது எனவும் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த வியாழக்கிழமை மாந்தையில் நடைபெற்ற இந்த விழா தொடர்பில் கேள்வி எழுப்பிய போது அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
 
எனவே மாந்தை இடம்பெயர்ந்தோர்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், துனுக்காயில் உள்ள மற்றுமொரு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
பாரிய  முகாம்களில் தங்கியிருப்பதனை விடவும் தமது சொந்த இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வாழ்வதனையே மக்கள் பெரிதும் விரும்புவதாக அரசாங்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

– சண்டே டைம்ஸ்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.