இலங்கை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கின்றது – திஸ்ஸ அத்தநாயக்க

இலங்கை சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கி நகர்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றால், உலகின் மிகப் பெரிய அமைச்சரவை எதற்கு என அவர் கேள்வி எழுப்பியள்ளார்.

tissa-athanayakkaநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினை தொடர்பில் இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்தத் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எரிபொருள் பிரச்சினையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும், அமைச்சர்களினால் எந்தவொரு தீர்வினையும் வழங்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதன் மூலம் இந்த அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை தெளிவாக வெளிப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஓர் தொழிற்சங்க நடவடிக்கையினைக் கூட அமைச்சர்களினால் தீர்க்க முடியாது என்பதன் மூலம் இந்த நாடு சர்வாதிகாரத்தை நகர்ந்து கொண்டிருப்பது புலப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
எரிபொருள் பிரச்சினையால் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒத்தி வைக்குமாறு பௌசி, தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.