அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற யுத்தம் சம்பந்தமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கை தொடர்பாக சுயாதீனமான விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குமாறு அமெரிக்க அரசாங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

srilanka-governmentஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எந்த அதிகாரிக்கும் எதிராகவும் விசாரணை நடத்த தாம் தயார் இல்லையென இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
 
73 பக்கங்களைக் கொண்ட அமெரிக்காவின் இந்த விசாரணை அறிக்கையின் மூன்று மாத காலப்பகுதிக்குள் 6 ஆயிரத்து 710 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு வலயப் பகுதி மீது பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சகல தகவல்களும் வன்னி இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற போது கொழும்பிலுள்ள அரசசார்பற்ற அமைப்புக்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த அறிக்கைக்காக தகவல்களை வழங்கிய இலங்கையிலுள்ள அரச சார்பற்ற செயற்பாட்டாளர்கள் இருவர் குறித்த தகவல்கள்
அரசாங்கத்திற்குத் தெரியவந்துள்ளது. அமெரிக்க தேசப்பற்றுச் சட்டமூலத்தின் கீழ் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக எவ்விதமான விசாரணைகளோ, சட்ட நடவடிக்கைகளோ மேற்கொள்ள முடியாததால் இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்து முனைப்புக்களை மேற்கெ ள்ள அமெரிக்க அரசாங்கத்திற்கு எவ்விதமான உரிமையும் இல்லையென இலங்கை அரசாங்கம் அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணங்க வேண்டும் என அமெரிக்க செனட் உறுப்பினர் பற்றிக் லெக்கி விடுத்த கோரிக்கையையும் அரசாங்கம் புறந்தள்ளியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.