தமிழர்களுக்கு தீர்வு அமைக்கப்படாவிட்டால் விடுதலைப் புலிகள் மீண்டும் பிறக்கலாம்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு நல்ல சூழல் உள்ளது ஆனால் தமிழர்களும் பொருளாதார அபிவிருத்தியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிக்கவும், அதனை பரவலாக பெற்றுக் கொள்ளவும், சிறுபான்மை மக்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என உலகவங்கி தெரிவித்துள்ளது.

worldbankஇராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை, பொருளாதார அபிவிருத்திக்கான பாரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல், அவர்களின் அரசியல் அபிலாசைகள் வழங்கப்படாமல் இருக்கும் நிலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை மீண்டும் தோற்றுவிக்கலாம்.

இந்த நிலையில், வெளிநாட்டு முதலீட்டு சாத்தியங்கள் குறைவடையும் அபாயம் உண்டு என்றும்  உலகவங்கி  எச்சரித்துள்ளது.தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு அடிப்படையிலேயே இலங்கைக்கான வெளிநாட்டினரது முதலீட்டு நடவடிக்கைகள் அமையும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.