கனடா சென்ற தமிழர்களை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்த மகிந்த அரசு அதீத முயற்சி

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் தொடந்தும் வைத்திருக்க சிங்கள அரசு அதீத முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் அனைத்து தாயகம் தொடர்பான நடவைக்கை களையும் பயங்கரவாதம் என்ற  பேரில் அவற்றையெல்லாம் மழுங்கடிக்க செய்யும் நடவடிக்கையில் சிங்கள அரசு திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கின்றது.

Oceanladyஇதில் ஒரு பகுதியாக தான் அண்மையில் இலங்கையில் சிங்கள அரசின் மிக கொடுமையான தமிழருக்கு எதிரான இராணுவ நடவைடிக்கையினால் ஏராளமான பொது மக்கள் முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களில் இருந்தும் சிறைகளில் இருந்தும் தப்பி ஓடி தஞ்சம் கேட்டு பல நாடுகளுக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்த புதிய இடப்பெயர்வின் மூலம் அங்கு நடந்த போர் கொடுமைகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் என்ற எதிர்பார்ப்பில் பீதியில் சிங்கள அரசு தப்பி செல்பவர்களையும், தப்பி செல்லும் படகுகளையும்  விடுதலைப்புலிகளுடன் தொடர்பு எனவும் பயங்கர வாதிகள் என்றும் சாயமூட்டுகின்றது.

அந்த வகையில் தான் கனடா சென்றவர்களையும் அந்த கப்பலான ஓசியன் லேடி கப்பலினையும் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்த அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றது. சிங்கள அரசு. இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அண்மையில் அவுஸ்ரேலிய பிரதமர் அந்த நாட்டு பாராளுமன்ற விவாதத்தின் போது  அவுஸ்ரேலியா வந்த அகதிகளின் மத்தியில் பயங்கரவாதிகள் இல்லை என குறிப்பிட்டதாகும்.

எனவே தமிழரின் அனைத்து முன்னேற்றகரமான விடயங்களுக்கும் சரி அவர்களின் போராட்டம் தொடர்பான முனைப்புக்களிலும் சரி   இலங்கை அரசு விடுதலைப்புலிகள் என்ற முத்திரையினை குத்ததான் போகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.