மாவோயிஸ்டுகளுடன் புலிகள் இணைவு : இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அறிக்கை

இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி, இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும், மத்திய இந்திய காடுகளில், பயிற்சி மற்றும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் நடத்தி வருகின்றனர் எனத் தெரிய வருகின்றது.

ltte_logoஇந்தத் தகவலை இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர், பி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய புலனாய்வு பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிஸ்கார் மற்றும் ஒரிசா, ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில், 12 பேரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் குழு, ஒன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் மத்திய புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மூன்று பிரிவுகளாக பிரிந்த இந்தக்குழுக்கள், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன. இந்தக்குழுக்களில் ஒன்று, விழிநகரம் ஏஜென்ஸி பிரதேசத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அடுத்து, இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, மாவோயிஸ்ட் வாதிகளின் மக்கள் விடுதலை போராளி இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகளின், உதவியைப் பெற்றுக்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த திட்டத்தின்படி இரண்டு அனுகூலங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

இந்திய படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல் மற்றும் இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியைச் சரிசெய்து கொள்வதற்காக, தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைப்பது என்பனவே அந்த அனுகூலங்களாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.