முடிவின்றி செல்லும் அவுஸ்ரேலிய விவாதங்கள், இந்தோனேசிய அகதி கப்பலில் இருப்போர் தீமூட்டுவோம் என எச்சரிக்கை

இந்தோனேசிய கடலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஓசியன் வைகிங் என்ற படகில் இருக்கும் மக்கள் தொடர்பில் அவுஸ்ரேலிய அரசு பாராமுகம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் அவுஸ்ரேலிய அரச பாராளுமன்றில் விவாதங்கள் தான் நடக்கின்றதே தவிர முடிவு எதுவும் எட்டப்படுவதில்லை என அவுஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

question_3d1இந்த நிலையில் படகில் இருக்கும் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். நிலமை இவ்வாறு தொடருமானால் தாம் அனைவரும் தீமூட்டி தற்கொலை செய்வதனை தவிர வேறு வழிகள் எதுவும் இல்லை என எச்சரித்துள்ளனர்.

தொடர்சியாக நான்கு ஐந்து வாரங்களாக பாதுகாப்பற்ற படகில் இருப்பதால் நிறுவர், பெண்கள் ஆகியோருக்கு கடல்வியாதி  வந்துள்ளதாகவும் இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.